உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் 5-ந்தேதி துவங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானி்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து என பத்து அணிகள் பங்கேற்கின்றன.
ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரையும் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யவில்லை. அவர்களை ஆசிய கோப்பை 2023 இந்திய அணியில் தேர்வு செய்தார். இத்துடன் காயத்தால் அவதிப்பட்டு, அதில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பேட்ஸ்மேன் பட்டியலில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர். கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா, சமி, சிராஜ், தாகூர் இடம் பெற்றனர். இந்தியா தனது உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் விளையாடுகிறது.