உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் காய்மடைந்த நெய்மர் – ரசிகர்கள் ஏமாற்றம்

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன் தினம் நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி உருகுவே அணியை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டத்தின்போது பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் (வயது 31) பலத்த காயமடைந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார்.

காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவரை ஸ்டிரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இல்லாத நிலையில் பிரேசில் அணி 2-0 என தோல்வியடைந்தது. நெய்மர் காயமடைந்தது பிரேசில் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அவரது காயம் பெரிய அளவில் இருக்காது என அணியின் கேப்டன் கேகேமிரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். “அவர் எங்களுக்கு முக்கியமான வீரர், அவர் தொடர்ந்து ஆடவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். ஆனால் அவர் காயங்களால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். காயத்தில் இருந்து குணமடைந்து பார்முக்கு திரும்பும்போது மீண்டும் காயமடைகிறார்” என்றும் கேப்டன் கேசேமிரோ கூறினார்.

மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல்கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது. அர்ஜென்டினா அணியின் இரண்டு கோல்களையும் மெஸ்சி அடித்தார். வெனிசுலா அணி சிலி அணியை 3-0 என்ற கோல்கணக்கிலும், பராகுவே அணி பொலிவியா அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வென்றன. ஈக்வடார்- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் கோல்கள் இன்றி டிரா ஆனது.

இதற்கிடையே ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில், சவுதி அரேபிய கிளப் அணியான அல் ஹிலால் அணிக்காக விளையாடி வரும் நெய்மர், அடுத்து நவம்பர் 6-ம் தேதி மும்பை சிட்டி எப்.சி. அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் தான். இப்போட்டி நவி மும்பையில் நடைபெற உள்ளது. நெய்மர் காயமடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports