உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் சென்னை வந்தடைந்தனர்

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

ஐசிசி 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இருப்பினும், அந்த தொடர் மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆனால் இப்போது நடத்தப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது.

லீக் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். பங்கேற்கும் பத்து நாடுகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஒரு முறை மோதும். அதன்பிறகு முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் வரும் 8-ந் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று சென்னை வந்தடைந்தனர் .

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports