X

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி – உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டன்கள் பங்கேற்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதுகிறது.

இந்தியா லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, நாக்அவுட்டில் சொதப்பும் நிகழ்வு கடந்த காலங்களில் நடைபெற்றது. 2015-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2019-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும் தோல்வியடைந்திருந்தது. தற்போது அந்த தடையை தகர்த்துள்ளது.

இந்தியா இதுவரை உலகக் கோப்பையில் இதற்கு முன்னதாக மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 1983-ல் கபில்தேவ் தலைமையிலும் 2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலும் 2011-ல் டோனி தலைமையிலும் முன்னேறியது. ஆனால் இதில் 2 முறை மட்டுமே கோப்பையை வென்றது.

உலகக் கோப்பையை இதுவரை வெஸ்ட் இண்டீஸ்(1975)(1979), இந்தியா(1983) (2011), ஆஸ்திரேலியா ((1987), (1999) (2003) (2007) (2015)), பாகிஸ்தான் (1992), இலங்கை (1996), இங்கிலாந்து (2019) ஆகிய அண்கள் வென்றுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை உலகக் கோப்பையை வென்ற அனைத்து நாட்டு கேப்டன்களும் நடப்பு உலகக் கோப்பை இறுதிப்போட்டியை காண வருமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.

Tags: tamil sports