Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இன்று ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை ருசித்தால் அரைஇறுதியை உறுதி செய்து விடும் நிலையில் உள்ளது.

ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 6-வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் மற்றும் முன்னாள் சாம்பியன்களுக்கு அதிர்ச்சி அளித்து இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வென்றால் முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்து சாதிக்க முடியும்.