X

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் உலகக் கோப்பை போட்டி தொடரில் அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுவிட்டது. மற்ற 3 அணிகள் எவை என்பதில் போட்டி நிலவுகிறது.

தென்ஆப்பிரிக்கா 7 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அந்த அணி இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ரன் ரேட் (+2.290) நல்ல நிலையில் உள்ளது. ஒரு வேளை இரண்டு ஆட்டங்களிலும் தோற்றாலும் மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்து எந்த இடம் என்பது அமையும்.

ஆஸ்திரேலியா 6 ஆட் டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி யுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. எஞ்சியுள்ள மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும். 2 வெற்றி அல்லது ஒரு வெற்றி பெற்றால் மற்ற ஆட்டங்களின் முடிவை பார்க்க வேண்டும. நியூசிலாந்து அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஒன்றில் தோற்றால் மற்ற அணிகள் முடிவை பார்த்து வாய்ப்பு அமையும். ஆப்கானிஸ்தான் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று உள்ளது. மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று ரன் ரேட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவது முக்கியம்.

பாகிஸ்தான் 6 புள்ளி களுடன் உள்ளது. எஞ்சி உள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும். ரன் ரேட்டிலும் நல்ல நிலைக்கு வர வேண்டும். நியூசி லாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்திடம் தோற்றால் 8 புள்ளிகள் பெறும். அப்போது மற்ற ஆட்டங்களின் முடிவு சாதகமாக இருக்க வேண்டும்.

தலா 4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்கு ஏற குறைய வாய்ப்பு முடிந்துவிட்டது. எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் அரை இறுதி வாய்ப்பு கடினம். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு மிக குறைவு.

வங்காளதேசம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டது. அந்த அணி 7 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

Tags: tamil sports