Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து வீரர் – மாற்று வீரர் அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி காயத்தால் தத்தளிக்கிறது. வில்லியம்சன், லோக்கி பெர்குசன், சாப்மேன், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் மேட் ஹென்றிக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி கடைசியாக நடந்த 3 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.