உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் பலம் வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தியா உலகக் கோப்பை வெல்ல அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார். இதுதொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:
அவர்கள் சொந்த மண்ணில் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்கள். மிகவும் அனுபவம் வாய்ந்த அணி என்பதால் ஆர்வத்தில் புதிதாக எதையும் செய்ய தேவையில்லை. உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பொறுத்தவரை யார் சிறப்பாக அழுத்தம் மற்றும் பிரஷரை கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை இந்திய அணி ஒரு வீரரையோ அல்லது இரண்டு வீரர்களையோ நம்பி இல்லை. இந்திய அணியை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் 8 முதல் 9 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதுதான் இந்திய அணியின் சிறப்பு.
ஆஸ்திரேலியா அணியை போல் அல்லாமல் இந்திய அணி யாரையும் நம்பியும் இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என தெரிவித்தார்.