உலகக்கோப்பை போட்டியில் எந்த அணிகள் எத்தனை வெற்றி பெறும் – ஜோசியம் சொல்லும் மெக்கல்லம்

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் எத்தனை ஆட்டங்களில் வெற்றி பெறும் என்பதை நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் அலசி ஆராய்ந்து ஒரு பட்டியலை ‘முகநூல்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன்படி ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து அணி 9 லீக் ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெறும், ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்கும் என்று ஆரூடம் சொல்லி உள்ளார். இந்திய அணியும் 8 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறிக்கும், இங்கிலாந்திடம் மட்டும் தோல்வியை தழுவும் என்பது அவரது கணிப்பாகும்.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை 6-ல் வெற்றியை வசப்படுத்தும். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, பாகிஸ்தான் அணிகளிடம் ‘சரண்’ அடையும் என்று குறிப்பிட்டுள்ள பிரன்டன் மெக்கல்லம், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் சிக்கலின்றி அரையிறுதியை எட்டும், என்கிறார்.

அரையிறுதிக்கான மற்றொரு இடத்திற்கு 4 அணிகள் முட்டிமோதும். அதாவது நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் தலா 5 வெற்றி, 4 தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவரது பார்வையில் வங்காளதேசம் (இலங்கைக்கு எதிராக), இலங்கை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) அணிகளுக்கு தலா ஒரு வெற்றி மட்டும் கிடைக்கும், ஆப்கானிஸ்தான் 2 வெற்றி (இலங்கை, வங்காளதேசத்துக்கு எதிராக) பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news