X

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி – இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் வெண்கலம் வென்றார்

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் வெண்கலம் வென்றார். மேலும், தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து அவர் சாதனை புரிந்துள்ளார்.

தரவரிசை சுற்றுக்கு நடைபெற்ற தகுதிச்சுற்றில் அஞ்சும் முட்கில் 586 புள்ளிகள் பெற்றார். தரவரிசை சுற்றில் 402.9 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஞ்சுல் முட்கில் வெள்ளி வென்றார்.

இதுகுறித்து அஞ்சும் முட்கில் கூறியதாவது:- டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எனக்கு பலவற்றை கற்றுக் கொடுத்தது. அங்கு கிடைத்த அனுபவம் எனக்கு இந்தப் போட்டியில் உதவியது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு வழக்கமான பயிற்சிக்குத் திரும்ப நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. நம்பர் 1 வீராங்கனையாகி இருப்பது கூடுதல் அழுத்தத்தை தரும். முதல் முறையாக நான் நம்பர் ஒன் வீராங்கனையாகி இருக்கிறேன். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார். இதனிடையே, 50 மீ ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளி வென்றது.