X

உலகக்கோப்பை கிரிக்கெட் – காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி விலகல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தது உள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி உள்ளது.

இந்நிலையில், அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் அடைந்துள்ளார். நேற்று வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியின் போது, தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேறினார்.

தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிகிடி விளையாடமாட்டார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags: sports news