X

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற நெதர்லாந்து அணி தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்களான வான் டெர் மெர்வே மற்றும் அக்கர்மேன் இருவரும் இடம்பிடித்துள்ளனர். நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 6-ம் தேதி பாகிஸ்தான் உடன் மோத உள்ளது.

நெதர்லாந்து அணி;- ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ’டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பர்ரேசி, சாகிப் சுல்பிகார், ஷரிஸ் அஹ்மத் மற்றும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

Tags: tamil sports