உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமிக்கு இடமில்லை.