Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் – இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங் அட்வைஸ்

உலகக்கோப்பை தொடரில் இந்தியா இதுவரை தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளது. இதில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் முக்கியமான கட்டத்தில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார்.

இதற்கிடையில் இந்தியா இரண்டு பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டுமா?. குல்தீப் யாதவுக்குப் பதிலாக முகமது ஷமியை தேர்வு செய்யலாம் என்ற கேள்விகள் ஒரு பக்கத்தில் இருந்து எழுகின்றன. இந்நிலையில் இந்தியா குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோருடன்தான் இந்தியா விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘தற்போதைய அணி சூப்பர் காம்பினேசன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியா பெற்றுள்ள முடிவுகளுக்கான சிறப்பை இந்த வீரர்களுக்கும் கொடுத்தாக வேண்டும்.

அவர்கள் இரண்டு பேரும் இணைந்து விளையாட வேண்டும் என்று நான் பார்க்கிறேன். ஏனென்றால், மற்ற எந்த அணியும் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடவில்லை. அவர்கள் மிடில் ஆர்டர் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை கையாண்ட பழக்கம் கிடையாது.

இங்கிலீஷ் கண்டிசனில் கூட இந்தியாவுக்கு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது வொர்க்காகியுள்ளது. ஏனென்றால், இரண்டு பேரும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள். இந்தியா சிறந்த லெவன் அணியை பற்றி சிந்தித்தால், அதில் இரண்டு பேருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *