உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மலிங்கா ஓய்வு

இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் லசித் மலிங்கா. உலகளவில் சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். ஒரு ஓவரின் அனைத்தை பந்தையும் துல்லியமான வகையில் யார்க்கராக வீசும் வல்லமை படைத்தவர்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் நேற்று லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்தது.இது அனைவருக்கும் சற்று ஆச்சர்யத்தை அளித்தது.

இந்த நிலையில், மலிங்கா உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.

லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 சீசன்களில் விளையாடியுள்ளார்.

122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 13 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தது சிறந்த பந்து வீச்சாகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools