காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானது ஒட்டுமொத்த இந்தியர்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது. 40 வீரர்களின் உயிர்த் தியாகத்துக்காக பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது.
இதில் தமிழக வீரர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் உயிர்நீத்துள்ளனர். அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இரு குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தர்வர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.