உயிரிழந்த எம்.எல்.ஏ-க்கள் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில், துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்காக இன்று காலை சட்டசபை மீண்டும் கூடியது. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வந்தபோது, அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்பு அளித்தனர். கூட்டம் தொடங்கியதும், முன்னாள் எம்எல்ஏக்கள் சாவித்திரி அம்மாள், ராஜேந்திர பிரசாத், ராஜசேகரன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
‘வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டிக்கிறோம்’ என்ற வாசகம் தாங்கிய பதாகையுடன் தமிமுன் அன்சாரி பேரவைக்கு வந்தார்.
முன்னதாக திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை செயலகத்தில் மனு அளித்தார்.