Tamilசெய்திகள்

உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஐகோர்ட்டு அளித்து தீர்ப்பு அவரது ஆதரவாளர்களையும், அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஐகோர்ட்டு இன்று அளித்துள்ள தீர்ப்பு கிடைத்துள்ளது. சட்டரீதியாக இதனை எதிர் கொள்வோம். பொதுக்குழுதான் சர்வ அதிகாரம் படைத்தது. ஐகோர்ட்டு பிறப்பித்தள்ள உத்தரவில் ஆணையர் ஒரு வரை நியமித்து பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஐகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதுபற்றி அதிகம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீர்ப்பு விவரங்கள் முழுமையாக கிடைத்த பின்னர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.