உம்மன் சாண்டி மறைவையொட்டி கேரளாவில் இன்று பொதுவிடுகுறை – இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பு

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

அவரது மறவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில்முறை கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் இன்று செயல்படாது எனவும் தெரிவித்துள்ளது. இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news