பாங்காக்கில் வரும் மே மாதம் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடுவதாக இருந்த
இந்திய வீராங்கனைகள் சிக்கி ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.
சிக்கி ரெட்டிக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் 4 முதல் 6 வாரங்கள் வரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக
இந்திய பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வெளியேறிய வீராங்கனைகளுக்குப் பதிலாக, சிம்ரன் சிங் மற்றும் ரித்திகா தக்கார் ஆகியோரை சேர்க்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.