உன்னை மேடையில் சந்திக்கிறேன் – இளையராஜாவின் பதிவால் பரபரப்பு

 

இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசை கச்சேரிகளை பல நாடுகளில் நடித்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம், இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சென்னையில் வருகிற 18-ஆம் தேதி ‘ராக் வித் ராஜா’ என்ற இசைக்கச்சேரி நடக்கவுள்ளது. இதில் இளையராஜாவும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாடல்களை பாடவுள்ளனர். இந்த நெகிழ்வான தருணத்தை வெளிப்படுத்தும் வகையில் தேவி ஸ்ரீ பிரசாத் “எனது கனவு நனவாகப் போகிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இளையராஜா “உன்னை மேடையில் சந்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools