உத்தவ் தாக்கரேவின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

 

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மைத்துனருக்குச் சொந்தமான நிறுவனங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இதில், உத்தவ் தாக்கரேவின் மைத்துனர்
பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவருக்கு சொந்தமான ரூ.6.45 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் சிவசேனாவை சேர்ந்த அனில் பராப் ஆகியோருக்கு நெருங்கிய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் சோதனை
நடத்தினர். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்காளம் மற்றும் மராட்டிய மாநிலங்களை மத்திய அரசு குறிவைத்து சோதனைகளை நடத்துகிறது என்று சிவசேனா குற்றம்சாட்டியது.

இந்நிலையில், சிவசேனாவின் முக்கிய நபரான உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools