உத்தர பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் நாளை பதவி ஏற்கிறார்

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது.

முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்வர்) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழா நாளை நடைபெற உள்ளது. உ.பி. முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools