Tamilசெய்திகள்

உத்தர பிரதேசத்தில் பட்டாசு கடையில் வெடி விபத்து – 2 சிறுவர்கள் பலி

உத்தர பிரதேசம் மாநிலம் கெல்வாடா கிராமத்தில் உள்ள வீட்டின் மேல்மாடியில் பட்டாசுக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையில் இன்று தீடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஹிமான்சு என்கின்ற 12 வயது சிறுமியும், பராசு என்ற 14 வயது சிறுவனும் உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் உயிரிழந்த சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டின் உரிமையாளர் ஷதாப் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.