உத்தரப் பிரதேசம் அரசு அதிகாரியின் காரை குடிபோதையில் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் – 3 பேர் பலி

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி பொதுப்பணித்துறையின் ஜூனியர் இன்ஜினியர் ஒருவருக்கு சொந்தமான கார் மோதி 3 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த காரை ஓட்டுனராக பணிப்புரிந்து வந்த அஜீத் குமார் பாண்டே ஓட்டி வந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டும்போது பாண்டே குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

கான்பூர் தேஹாட்டில் உள்ள சிக்கந்தராவில் ஜூனியர் இன்ஜினியரின் குடும்பத்தை இறக்கிவிட்டு அயோத்திக்கு பாண்டே சென்று கொண்டிருந்தபோது, லக்னோ- எட்டாவாசாலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுரேந்திர சிங் (62), அஹிபரன் சிங் (63), கசீதே யாதவ் (65) ஆகியோர் மீது மோதியதாக, போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திலிருந்து காரை விட்டுவிட்டு தப்பி ஓடிய குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news