உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி இரண்டு குழந்தை உள்ளிட்ட 7 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகள் பப்லு (30) மற்றும் வர்ஜீத் யாதவ் (32) ஆகியோர் உஷைத் பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் அப்பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உஷைத் நகரில் நடந்த மற்றொரு மின்னல் சம்பவத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார். மூன்று உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர். மேலும், மூன்று பேர் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர். திஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெண்டலால் கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் மோஹித் பால் (14) என்பவர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மில் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூர்வா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜமுனா பிரசாத் (38) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். ரேபரேலியின் சராய் டாமோ கிராமத்தில் படோகர் காவல் நிலையப் பகுதியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ராமகாந்தி (38) மின்னல் தாக்கி இறந்தார். மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் மேலும் மூவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news