Tamilசெய்திகள்

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது – சம்பவ இடத்தில் போலீஸ் குவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். சத்தம் கேட்டு கட்சி தொண்டர்கள் அங்கு வரும் முன்பு, மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதீப் சிங்கால் கட்சி அலுவலகத்திற்கு விரைந்தார்.

சம்பவத்தையடுத்து சிஓ சிட்டி மயங்க் திவேதியுடன் பலத்த போலீஸ் படை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை சமாதானப்படுத்த முயன்றது. இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிஓ சிட்டி திவேதி உறுதியளித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.