உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல் – 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பா.ஜ.க
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
பா.ஜ.க. 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 47 இடங்களைக் கைப்பற்றி, உத்தரகாண்டில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ளது என தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் விவரம்:
பா.ஜ.க 47 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றி
மற்றவை 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.