Tamilசெய்திகள்

உத்தரகாண்ட், கோவா மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது

ஐந்து மாநில சட்ட சபைத் தேர்தலில் இன்று உத்தரகாண்ட், கோவா மாநிங்களில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

உத்தரகாண்டில் மொத்தம் உள்ள  70 சட்டசபைத் தொகுதிகளில்
152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 11,697 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.
அந்த மாநிலத்தில் 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகளுடனும், பலத்த பாதுகாப்புடனும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கானகஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவாவில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 301 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். இதில்  68 சுயேச்சைகளும் அடங்குவர். 11 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இன்று தங்களது வாக்குகளை பதிவு செய்கின்றனர். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது

உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட இன்று 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சஹரன்பூர், பிஜ்னோர், மொராதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, புடான், பரேலி மற்றும் ஷாஜஹான்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம்  586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி மாநில போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.