உதவி இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் கருணாஸ்

 

லொடுக்கு பாண்டி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர் கருணாஸ். அதன்பின் வில்லன், காதல் அழிவதில்லை, திருடா திருடி, பிதாமகன் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். பிறகு கதாநாயகனாகவும்
பாடகராகவும் தீவிரமாக அரசியல்வாதியாகவும் பயணித்து வந்தார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கி சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்றவுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் கருணாஸ், “கிராமிய கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய
அங்கீகாரத்தை கொடுத்தது திரைத்துறைத்தான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து உள்ளேன். ஆற்றல்மிகு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி.
கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு.

பல திரைப்படங்களில் இப்போது நான் நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழர் வீரத்தை பறைசாற்றும் இந்தப் படத்தில் பணியாற்றுவது பெருமை. ராமனுக்கு அணிலாக இருப்பதை போல, இந்த வெற்றி அணியில், வெற்றிமாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன். நீண்ட
காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குனர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது” என்று பகிர்ந்துள்ளார்.
—————————-

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools