உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குநர் சீனு ராமசாமி பிறந்தநாள் வாழ்த்து

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது வெளியாக தயாராகி உள்ளது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் சீனுராமசாமி ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி முன்னாள் நடிகரும் தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இன்று தேனி கோடாங்கிபட்டியில் எனது இயக்கத்தில் கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பூத்திருந்த தூதுவளை சிறு மலரால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைய தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்துகிறேன். அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news