Tamilசினிமா

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து, ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், ‘ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு எமோஷனல் கதை இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் கிரைம் திரில்லர் வகை படமாக வெளியான ‘கலகத் தலைவன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.