Tamilசெய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பாகிறது

உச்சநீதிமன்றத்தில் இன்று முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், www.webcast.gov.in/events/MTc5Mg என்கிற இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படும் வழக்கு விசாரணையை பொது மக்கள் காணலாம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரது அமர்வின் விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது.