உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு

உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியான என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து, புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை பொறுப்பேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools