”உசுரே நீதானே..” பாடல் இத்தனை கோடி பேரை கவரும் என்று எதிர்பார்க்கவில்லை – நடிகர் தனுஷ் பதிவு

தனுஷின் 50-வது படமான ‘ராயன்’ கடந்த 26-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் ‘ராயன்’ படத்தின் “அடங்காத அசுரன்” பாடலைப் பாடிய உணர்ச்சிகரமான குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

அதனுடன், ‘நான் எழுதிய ‘உசுரே நீதானே’ என்ற இந்த இரண்டு எளிய வார்த்தைகள் உங்கள் மேஜிகள் இசையால் இத்தனை கோடி பேரை கவரும் என்று நான் பார்க்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியத்தில் சுமார் 35,000 ரசிகர்கள் அடங்கிய நிகழ்ச்சியில் இந்திய இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அங்கு ‘ராயன்’ படத்தின் மோஷன் போஸ்டரும் எல்இடி திரையில் காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சி சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools