“உங்களுக்கு ஏன் அதிகமான ரசிகரக்ள் இல்லை” – பத்திரிகையாளரின் கேள்விக்கு விக்ரம் சுவாரஸ்ய பதில்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “தங்கலான்.” மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரமிடம் ஒரு பத்திரிக்கையாளர் உங்களுக்கு ஏன் அஜித், சூர்யா போன்ற அளவுக்கு ரசிகர்கள் இல்லை என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு விக்ரம் சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.

அதற்கு விக்ரம் ” என்னோட ரசிகர்கள் பட்டாளத்தைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. படம் ரிலீஸாகும் போது வந்து தியேட்டரில் பாருங்கள். அனைத்து மக்களும் எதோ ஒரு வகையில் என்னோட ரசிகர்கள் தான்.” என்றார். மேலும் ரசிகர்க் ஒருவர் இதை கேட்டு “அஜித் சூர்யாவிற்கெல்லாம் வெறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் விக்ரமிற்கு அது கிடையவே கிடையாது.” என்றார்.

மேலும் விக்ரம் ” நான் சினிமாவை நேசிக்கிறேன், கமெர்ஷியல் படங்கள் செய்யாமல், வித்தியாசமான சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன்.” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools