உக்ரைன் விமான விபத்து – 170 பேர் பலி
ஈரானில் இருந்து இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கிவ் நோக்கி புறப்பட்ட போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம் (பி.எஸ் 752) தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்த மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
கீழே விழுந்து நொறுங்கியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் மீட்புப்பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 170 பேரும் உயிரிழந்தாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.