Tamilசெய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்! – ஏ.டி.எம் மற்றும் கியாஸ் செண்டர்களில் குவியும் மக்கள்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. கிழக்கு பகுதியில் மட்டுமே தாக்குதல் நடத்துகிறோம் என்று ரஷியா தெரிவித்தது. ஆனால், நாடு முழுவதும் அதிரடியாக விமானத் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பாராசூட் மூலம் உக்ரைன் நகருக்குள் ரஷிய ராணுவம் இறங்கி தாக்குதல் நடத்துகிறது.

தலைநகர் கீவ் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேற்கு பகுதி மற்றும் தலைநகரங்களில் இன்று காலை வரை மக்கள் தைரியமாக இருந்தனர். ரஷியா எல்லா முனைகளிலும் இருந்து தாக்குதல் நடத்துவதால் கடும் பதட்டம் நிலவி வருகிறது.

மேலும், உக்ரைன் சில இடங்களில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால், வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி திண்டாட வேண்டியிருக்கும். இதனால் கீவ் பகுதியில் வசிக்கும் மக்கள் ஏ.டி.எம். சென்டர் நோக்கியும், கியாஸ் ஸ்டேசன் நோக்கியும் குவிந்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையே மக்கள் கார்களில் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஆகவே, சாலைகளில் கடும் போக்குவரத்து நிலவி வருகிறது.