X

உக்ரைனுக்கு ராணுவ ரீதியான உதவிகளை தொடர்ந்து வழங்குவோம் – பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் உறுதி

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், இதை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு, தமது பயணத்தின் ஒரு பகுதியாக உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றுள்ளார். அப்போது, உக்ரைனுக்கு மேலும் ராணுவ ரீதியான ஆதரவை பிரான்ஸ் தொடர்ந்து வழங்கும் என்று அவர் அறிவித்தார்.

பிரான்ஸ் வழங்கும் 200 மில்லியன் யூரோ மதிப்பிலான நிதியுதவி மூலம், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் ஆயுதங்களை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், மேலும் உக்ரைன் ராணுவத்திற்கு, பிரான்ஸ் ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.