உக்ரைனில் இன்னும் 50 இந்தியர்கள் மட்டுமே உள்ளன – பாரளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி, ரஷியா தொடுத்துள்ள போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து கடந்த மாதம் முதல் 22,500 மாணவர்கள் உள்பட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்தார்.

உக்ரைனில் இன்னும் 50 இந்தியர்கள் மட்டுமே உள்ளதாகவும், அவர்களில் சிலர் மட்டுமே நாடு திரும்ப தயாராக உள்ளனர் என்றும் கூறினார். அவர்களையும் இந்தியாவிற்கு அழைத்து வர தூதரகம் உதவி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய போது சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் திட்டத்தை தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் 35 நாடுகளில் இருந்து சுமார் 2 கோடியே 97 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப வசதி ஏற்படுத்தப் பட்டதாகவும் மந்திரி மீனாட்சி லேகி கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools