உக்ரைனின் கீவ் நகரில் குப்பை தொட்டிகளில் வீசப்பட்ட மனித உடல்கள்!
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. வான்வெளி, தரைவழி கடல்வழி என பலமுனைகளில் தனது தாக்குதலை உக்கிரமாக நடத்தி வருகிறது. இந்த
போர் ஆரம்பித்து 6 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களை கைப்பற்ற ரஷியா கடுமையாக போராடி வருகிறது. ஆனால் உக்ரைன் படை வீரர்களும் அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என
எதிர்த்து சண்டையிடுகின்றனர்.
இதனால் ரஷியா படைகளும் திணறி வருகிறது. கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரை ரஷியா படைகள் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதியில் ஆதிக்கம்
செலுத்த ரஷியா முழு கவனம் செலுத்தி வருகிறது.
போர் உச்சகட்டதை எட்டி உள்ள நிலையில் புச்சா நகரை மீண்டும் உக்ரைன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த நகரை விட்டு ரஷியா வெளியேறுவதற்கு முன்பு பொது
மக்கள் மீது அவர்கள் தனது கொடூர தாக்குதலை அரங்கேற்றி உள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த நகரில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் ரோடுகளில் சிதறி கிடந்தது. சிலரது உடல்கள் குப்பை தொட்டியில் வீசப்பட்டு இருந்தது.
புச்சா நகர சாலைகளில் வெடிக்காத குண்டுகள் சிதறி கிடந்தன. வெடிக்காத கண்ணிவெடிகள் அப்படியே கிடக்கிறது.
இங்கு 410 பேர் கொன்று புதைக்கபட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார். இதில் கிறிஸ்தவ ஆலயம் அருகே 45 அடி நீள புதைக்குழியில் 280 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பாதி புதைக்கப்பட்ட நிலையில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் உடல்களில் பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் அருகில்
இருந்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது,
சிலரது கைகள் பின்புறமாக கட்டபட்டு இருந்தது. அவர்கள் உடல்கள் வெள்ளை துணியால் மூடப்பட்டு இருந்தது. சிலரது தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான அடையாளங்கள் இருந்தது.
சிலர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யபட்டு இருக்கலாம் என உக்ரைன் ரஷியா மீது குற்றம் சுமத்தி உள்ளது.
தனது 33 வயது மகள் ஆண் நண்பருடன் ரஷிய படைகளால் சுட்டுக்கொல்லபட்டதாக அந்த பெண்ணின் தந்தை தெரிவித்து உள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் ரஷியா ஈடுபடவில்லை என அந்நாட்டு
பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தங்களது கட்டுப்பாட்டில் இருந்த போது எந்த ஒரு வன்முறை நட வடிக்கையாலும் பொது மக்கள் பாதிக்கவில்லை என்றும் பொதுமக்களை உக்ரன்
படையே கொன்று விட்டு நாடகமாடி வருவதாகவும் ரஷியா கூறுகிறது. ஆனால் ரஷியா வெளியேறு வதற்கு முன் பொதுமக்களை ஈவு இரக்கமின்றி கொன்ற தாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.
பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதியில் ரஷியா துப்பாக்கி சுடு நடத்தியது. இதில் 7 பேர் இறந்தனர்.
34 பேர் காயம் அடைந்தனர். 10 வீடுகள் சேதம் அடைந்தது.