X

உகாண்டா பாரா-பேட்மிண்டன் – 47 பதக்கங்களை வென்ற இந்திய அணி

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் பாரா-பேட்மிண்டன் சர்வதேச போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்கள் பெற்று அசத்தினர்.

பாலக் கோலி, அபு  ஹுபைதா மற்றும் அம்மு மோகன் ஆகியோர் தலா இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றனர். மானசி ஜோஷி மகளிர் ஒற்றையர் எஸ்எல்-3 பிரிவில் தங்கம் வென்றார்.

தங்கம் வென்றவர்கள்: மனோஜ் சர்க்கார், சுகந்த் கதம், ஹர்திக் மக்கர், அபு ஹுபைதா, தினகரன், பாலக் கோலி, மானசி ஜோஷி, ஜோதி, அம்மு மோகன், அர்வாஸ் அன்சாரி, தீப் ரஞ்சன், சிராக் பரேத்தா, ராஜ் குமார், மந்தீப் கவுர், ருத்திக், சிவராஜன்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத், ஆடவர் ஒற்றையர் எஸ்எல்-3 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான இரட்டையர் எஸ்எல்3-எஸ்எல்4 போட்டியில் மனோஜ் சர்க்காருடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பின்னர் கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 போட்டியில் பாலக் கோலியுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.