ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக் மெர்சண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளன.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கனி மார்க்கெட் தினசரி மற்றும் வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் சங்கம், பவர்லூம் கிளாத் மெர்சன்ட்ஸ் அசோஷியேஷன், டெக்ஸ்டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேசன், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம், நூல் வியாபாரிகள் சங்கம், சூரம்பட்டி விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம், சென்னிமலை விசைத்தறியாளர்கள், பனியன் மார்க்கெட் வியாபாரிகள், தமிழ்நாடு சைசிங் மில் ஓனர்ஸ் அசோஷியேஷன், ஸ்கிரீன் பிரின்ட் அசோசியேசன், கைத்தறி துண்டுகள் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட 25 சங்கங்கள் கடையடைப்பு போரா ட்டத்தில் பங்கேற்றுள்ளன.
நூல் விலை உயர்வால் ஜவுளி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதுடன், வணிகமும் பாதியாக சரிந்துள்ளது. இதனால் ஜவுளி வணிகர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக வணிகர்கள் தெரிவித்தனர். ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நூல் விற்பனையை நீக்கவும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தி மத்திய-மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்த கடையடைப்பு போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. இதுதான் நாளொன்றுக்கு ரூ. 100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 2வது நாளாக நூல் உயர்வை கண்டித்து இன்றும் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள், ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு ஜவுளி சந்தையில் அடைக்கப்பட்டிருந்தன. இன்று ஜவுளி வார சந்தை ஆகும். இன்று மட்டும் 780 கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, நேபாளம், மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளிகளை மொத்த விலைக்கு கொள்முதல் செய்வது வழக்கம். நூல் விலை உயர்வை கண்டித்து நடந்து வரும் கடையடைப்பு போராட்டம் காரணமாக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வார ஜவுளி சந்தைகள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் என்று வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் அசோகபுரத்தில் உள்ள ஜவுளி வாரசந்தை கடைகள், சென்ட்ரல் தியேட்டர் அருகே போடப்படும் ஜவுளி வார சந்தைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதை அறியாமல் இன்று வாரச்சந்தைக்கு வந்த வெளிமாநில வியாபாரிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.