ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்புமுனையாக அமையும் – செங்கோட்டையன் பேச்சு
ஈரோட்டில் இன்று பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அ.தி.மு.க . ஆட்சியில் 55 லட்சம் மடிக்கணினிகள், 65 லட்சம் மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தாலிக்கு தங்கம், ஸ்கூட்டி, கறவை மாடுகள், ஆடுகள் என பல உதவிகள் மக்களுக்கு செய்யப்பட்டன.
ஆனால் தி.மு.க. அரசு அனைத்தையும் நிறுத்திவிட்டது. மாறாக வீட்டு வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. எனவே தி.மு.க. அரசை எச்சரிக்கும் விதமாக தேர்தல் அமையட்டும். அ.தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
திண்டுக்கல் இடைத்தேர்தல் எம்.ஜி.ஆருக்கும், மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி தேர்தல்கள் ஜெயலலிதாவுக்கும், ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் எடப்பாடி யாருக்கு திருப்பு முனையாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.