ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – ஓ.பன்னீர் செல்வம் நாளை பிரசாரம் செய்கிறார்

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவர் கட்சியின் தீவிர உறுப்பினர். தீவிர விசுவாசி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். அவரை ஆதரித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி ஆகியோர் ஏற்கனவே பிரசாரம் செய்து வருகிறார்கள்.

நாளை முதல் நானும் (ஓ.பன்னீர் செல்வம்) கழக நிர்வாகிகளும் செந்தில்முருகனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவோம். இந்த தேர்தலில் எங்களுடைய நிலையை ஜனநாயக பண்பை ஈரோடு கிழக்கு தொகுதியில் சொல்வோம். தீர்ப்பளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் வாக்காளர்களிடம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools