ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரை களம் இறக்குகிறது. நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை செயலாளராக உள்ள கோமதி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவரே இடைத்தேர்தலிலும் போட்டியிட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்திய பிறகு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.