ஈரான் போராட்டத்தில் 19 குழந்தைகள் பலி – ஆய்வில் தகவல்

ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 17-ந்தேதி மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் இறந்த பிறகு போராட்டம் வலுவடைந்து உள்ளது. பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது.

போலீசார்-போரட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் இது வரை 185 பேர் பலியாகி விட்டதாகவும். இதில் 19 பேர் குழந்தைகள் என்றும் ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. ஆனால் இதனை ஈரான் அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools