நடிகர் ஆதி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். பின் 2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஈரம்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
ஈரம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அய்யனார், அரவான், கோச்சடையான், வல்லினம், ரங்கஸ்தலம், மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு, நடிகை நிக்கி கல்ரானியை 2022 ஆம் ஆண்டு மணமுடித்தார்.
தற்பொழுது ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் ‘சப்தம்’ படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. சப்தம் படத்தின் டீசரை நடிகர் அருண் விஜய், தக்குபாடி வெங்கடேஷ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளனர்.