இஸ்லாமியர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திர மாநிலம், மேற்கு கோதவரி மாவட்டத்தில், நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். கர்னூல் உருது பல்கலைக்கழகம் மேம்படுத்தப்படும். கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஐதராபாத், விஜயவாடாவில் ஹஜ் ஹவுஸ் கட்டப்பட்டது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமியர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதேபோல் சமூக வலைத்தளத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தி குறிப்பில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

சொந்த தொழில் செய்ய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools