X

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் அவர் நேதன்யாகுவிடம், என்னுடன் நான் கொண்டு வந்துள்ள செய்தி இதுதான். உங்களை தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். அமெரிக்கா இருக்கும் வரை நீங்கள் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை. போர்ச்சூழலைப் பயன்படுத்தி யாராவது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என தெரிவித்தார்.

Tags: tamil news